அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி: தேவையான தகுதிகள் என்ன?

Published On:

| By Kalai

Government Bus Driver Conductor Jobs

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 122ஓட்டுனர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம்ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுனர் பணி இடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி இடங்களையும் நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203காலி பணியிடங்களில் 122ஓட்டுனர் பணியிடங்களையும்,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு கல்வி தகுதியாக 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக போக்குவரத்து வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம்(லைசென்சு) , முதலுதவி சான்றிதழ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் 24வயது முதல் 40வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

18மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உயரம் 160செ.மீ. குறையாமலும், எடை குறைந்தப்பட்சம் 50கிலோவாகவும், கண் பார்வை தெளிவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஓட்டுனர்களுக்கான சம்பளம் ரூ.17ஆயிரத்து 700- லிருந்து ரூ.56 ஆயிரத்து 200வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 2பணிகளை சேர்த்து செய்பவர்களுக்கும் இதே அளவில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலை.ரா

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share