மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்!

Published On:

| By Kalai

மக்கள் பணிகளுக்காக நிதி ஒதுக்கும் விவகாரத்தில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பல்வேறு பணிகளுக்காக 10 லட்ச ரூபாய் வரை மட்டுமே அனுமதி வழங்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இருந்தது.

தற்போது மாநகராட்சி ஆணையர்கள் ஒரு கோடி ரூபாய் வரை அனுமதி வழங்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.  

சென்னை மாநகராட்சிக்கு தவிர்த்து மீதமுள்ள மாநகராட்சிகளுக்கு செலவுத் தொகை, அனுமதி வழங்கும் அதிகாரம் குறித்து அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று மாநகராட்சி பொது நிதியை  30 லட்ச ரூபாய் வரை பயன்படுத்த மேயர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது 50 லட்சம் வரை நிதி ஒதுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் 10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் எனவும் பத்து கோடிக்கு மேலான பணிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

மகள் இயக்கத்தில் ரஜினி: புதிய அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel