ஒசூர் அருகே சரக்கு ரயில் ஒன்று இன்று (ஏப்ரல் 21) அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி உரமூட்டைகளுடன் சரக்கு ரயில் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்தபோது இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 3வது முதல் 8வது பெட்டி வரையிலான 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. அவற்றை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
வேங்கைவயல் விவகாரம்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ஸ்டாலின் டு விஜய்: ப்ளூ டிக் நீக்கி ட்விட்டர் கொடுத்த அதிர்ச்சி!