பயணிகளுக்கு குட் நியூஸ்…தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!
சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூரில் தொடங்கி இடையில் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த அதிவிரைவு ரயிலை மேலும் சில நிறுத்தங்களில் நிறுத்தி சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், தேஜஸ் ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (பிப்ரவரி 24 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் -க்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘குட் மார்னிங் அமெரிக்கா’: ராம்சரண் பங்கேற்றது சினிமாவுக்கு பெருமை!
இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்