தமிழகத்தில் இன்று (மே 15) 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்று (மே 15) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. – 50 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மே 16 மற்றும் மே 17 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ – 50 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,மே 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேப்போல், மே 19ஆம் தேதி தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு
இன்று முதல் மே 19ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பு நிலையை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 37-39 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-37 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-36 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்
இன்று (மே 15) முதல் மே 19ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60-85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 60-85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு கடலோரப் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி. மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி. மீ. வேகத்திலும் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தயவு செஞ்சு இதை பண்ணாதீங்க… ஜிவி பிரகாஷ் ரெக்வஸ்ட்!
102 வயதிலும் கெத்தாக கிரிக்கெட் விளையாடும் முதியவர்!