பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பால புனரமைப்பு பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் 1973-ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகும்.
மேலும், நாட்டிலேயே மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலம். ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்த ஐந்து சாலை சந்திப்பில் இம்மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் இது ஜெமினி மேம்பாலம் என அழைக்கப்பட்டது.
இந்த மேம்பாலத்தின் பெயரை அண்ணாவின் நினைவாக, அண்ணா மேம்பாலம் என பெயரிட்டார் கருணாநிதி. குதிரை பந்தயத்தை ரத்து செய்ததன் நினைவாக குதிரை வீரன் சிலையை, 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் கீழே, கலைஞர் 1974-ஆம் ஆண்டில் நிறுவினார்.
நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வரும் அண்ணா மேம்பாலம் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் மேம்பாலத்தை புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 8.5 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் தூண்களை GRC பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அண்ணா மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.
மேம்பாலத்தின் கீழே, பொலிவூட்டும் பசுமையான செடி வகைகளை அமைக்கவும் பொதுமக்கள் நடந்த செல்ல ஏதுவாக நடைபாதைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புனரமைக்கப்படும் அண்ணா மேம்பாலப் பணிகள், மார்ச் – 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கலை.ரா
பன்னீரிடம் இருப்பது தனியார் கம்பெனி: ஜெயக்குமார்
அன்று தமிழாசிரியர்- இன்று தமிழ்ச்செம்மல்! – புலவர் சண்முகவடிவேலுவின் நகைச்சுவைப் பயணம்!