சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை!

தமிழகம்

சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 13) பிற்பகல் முகமூடி அணிந்து நுழைந்த 3 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சில கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. வங்கியின் முன்னாள் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கலை.ரா

திருவள்ளுவர் வடிவில் பறந்த பட்டம்: மீண்டும் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.