தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 13) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 விலை அதிகரித்துள்ளது. Gold Silver rate today
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,980-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து ரூ.8,705-க்கும், ஒரு சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.69,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.