தை மாதம் என்பது முகூர்த்தத்திற்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இதனால் பலரும் தை மாதங்களில் திருமண நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தை மாதம் நெருங்கியுள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சென்னையில் இன்று (டிசம்பர் 4) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.60 விலை உயர்ந்து ரூ.5,975-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.480 விலை உயர்ந்து ரூ.47,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 விலை உயர்ந்து ரூ.6,518-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.520 விலை உயர்ந்து ரூ.52,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாக்கும் மழை… தத்தளிக்கும் சென்னை
தண்ணீரில் தரையிறங்க முடியாது: தற்காலிகமாய் மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!