சவரனுக்கு ரூ.640 உயர்வு… ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

Published On:

| By Selvam

சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (டிசம்பர் 11) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ. 58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,940-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.63,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1, 03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்: ஏன்?

Paiyaa: கார்த்தியின் ஜோடியாக ‘நடிக்க’ வேண்டியது இவர் தானாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel