பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று (ஜனவரி 12) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,236-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,230-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.6 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ.41,840-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.48 விலை உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.7 விலை உயர்ந்து ரூ.5,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.56 விலை உயர்ந்து ரூ.45,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 – ஒப்புதல் அளித்த ஆளுநர்- அமைச்சர் தகவல்