தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டது. ஆனால் தங்கம் வாங்க உகந்தநாளாக கருதப்படும் “அட்சய திருதி” நாளான நேற்று தங்கம் விலை மூன்று தடவை ஏறி ஒரு சவரனுக்கு ரூ.1,240 ஆக உயர்ந்தது.
மேலும், நேற்றையதினம் ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்த போதும், மக்கள் நகை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
இதனால் அட்சய திருதியை முதல் நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ. 54,160க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே 11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,750க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,220க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.57,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிலோ ரூ.2,500 உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.90.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.700 குறைந்து, ரூ. 90,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் : முக்கிய குற்றவாளி கைது!
சிஎம்டிஏ புகாரில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நடந்தது என்ன?