தங்கம் விலை இன்றும் (ஜூலை 27) அதிகரித்துள்ளது.
தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிலும் தங்கத்தின் தேவை அதிகமாகவே இருந்தது. 2020ல் ஒட்டுமொத்த சர்வதேச தேவை 3,658.8 டன்னாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது. 2021ஆம் ஆண்டு 4,021.3 டன்னாக உயர்ந்தது.
இந்த ஆண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதிகரித்து வருகிறது.
நேற்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 37,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து ரூ.4,728-ல் இருந்து ரூ.4,735ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 56 அதிகரித்து ரூ.37,824ல் இருந்து ரூ. 37,880ஆக அதிகரித்துள்ளது.
24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து 41,328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பிரியா