நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 5,323 ரூபாய்க்கும், பவுன் 42,584 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த விலை இன்று (ஜனவரி 24) உயர்ந்துள்ளது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் 32 ரூபாய் உயர்ந்து 5,270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பவுனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 42,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் 46,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை 74 ரூபாயகவும், ஒரு கிலோ 74000 ரூபாயாகவும் உள்ளது.
பிரியா
புதிதாக மாற்றப்படும் பெரியார் நினைவிடம் : அமைச்சர்கள் ஆய்வு!