தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் (ஏப்ரல் 14) விலை உயர்ந்துள்ளது.
வரும் 22ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலரும் அன்றைய தினம் தங்கம் வாங்க காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,720க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,760க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து 83 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000க்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களாக ஏப்ரல் 10ஆம் தேதியை தவிர ரூ.45,000க்கும் குறையாமல் தங்கம் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கார்த்தி படத்தில் கீர்த்தி ஷெட்டி
அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!