தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து 5,570 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி,சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22காரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 6, 017 ரூபாய்க்கும் ஒரு சவரன் 48, 136 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 80.30 மற்றும் ஒரு கிலோ வெள்ளி 80,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரத்னவேல் கதாபாத்திரம்: பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய பகத் பாசில்
செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு: தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மாறுமா?