சென்னையில் இன்று (மே 8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.53,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 7) ஒரு கிராம் தங்கம் ரூ.6,640க்கும், சவரன் ரூ. 53,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.10 குறைந்து, ரூ.6,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.53,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.7,100க்கும், சவரன் ரூ.80 குறைந்துரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 88.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”எனது பிரபலத்திற்கு ’புஷ்பா’ தான் காரணமா? : பகத் பாசில் நச் பதில்!
அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ‘கூகுள் பிக்சல் 8A’!