தங்கம் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 25ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.53,240க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று (மே 25) ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் எந்தமாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து, ரூ.53,760க்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.53,760க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,190க்கும், ஒரு சவரன் ரூ.57,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ தங்கம் விலை ரூ.1,500 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ரூ.97.50க்கும், ஒரு கிலோ ரூ.1,500 உயர்ந்து ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி : 35 பாலஸ்தீனியர்கள் பலி!
பாம்பன் பாலம் வழியாக கப்பல்கள் செல்ல தடை: என்ன காரணம்?