தங்கம் விலையில் இன்று (ஜூன் 7) சவரனுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.54,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 6) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,400க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.54,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,840க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.54,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,310க்கும், ஒரு சவரன் ரூ.58,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.98க்கும், ஒரு கிலோ ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 7) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,500 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ரூ.100.50க்கும், ஒரு கிலோ ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : பதவி ஏற்கும் புதிய அரசு… பங்குச் சந்தை உச்சம் தொடுமா? வீழுமா ?