gold rate september 20

மீண்டும் ரூ.55,000-ஐ கடந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 20) யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.58,720-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்த வரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? – ஆட்சியர் விளக்கம்!

வேலைவாய்ப்பு: சென்னை எம்டிசி-யில் பணி!

இந்தியாவில் ‘ஐபோன் 16’ சேல்ஸ்… ஷோரூம்களில் அலைமோதிய கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0