சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 22) சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.7,298-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து ரூ.58,384-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.7,753-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து ரூ.62,024-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 கூடி, ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 கூடி, ரூ.1,10,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து ரூ.58000க்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு குறைவதற்கான வாய்ப்புள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
400 கோடி அரசு நிலம் அபகரிப்பு : அறப்போர் இயக்கத்திடம் சிக்கிய அமைச்சர் யார்?