சென்னையில் இன்று (ஏப்ரல் 17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 15 அன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) வரலாறு காணாத அளவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அந்த வகையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 17) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,87௦க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5௦ காசுகள் குறைந்து ரூ.90.௦0-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 குறைந்து ரூ.90,௦00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையில் உங்கள் நகங்களை பராமரிப்பது எப்படி?
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்… ரசிகர்கள் ஏமாற்றம்… இதுதான் காரணமா?