சென்னையில் இன்று (ஏப்ரல் 29) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 28) ஒரு கிராம் தங்கம் ரூ.6,770 க்கும், சவரன் ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.30 குறைந்து, ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.7,210க்கும், சவரன் ரூ.240 குறைந்து ரூ.57,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 87.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று (ஏப்ரல் 29) சற்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 WorldCup : 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நியூசிலாந்து!
வேலைவாய்ப்பு: மாவட்ட நீதிமன்றங்களில் பணி!