சென்னையில் இன்று (அக்டோபர் 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.37,928-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நகைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நேற்று (அக்டோபர் 22) அதிரடியாகச் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
22 கேரட்
ஒரே நாளில் 600 ரூபாய் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 37,928-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 1 விலை உயர்ந்து ரூ. 4,741-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று ரூ. 8 உயர்ந்து ரூ. 41,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 1 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 5,172-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் வெள்ளி ரூ. 63.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 63,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
சத்யா… விஷ்ணு பிரியா: தொடரும் ஒருதலை காதல் கொலைகள்!
நெருங்கும் பருவமழை: மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்ட இறையன்பு!