தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று (அக்டோபர் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 1 அன்று 37,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 4,690-க்கு விற்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 2) விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ. 4705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் விலை (10 கிராம்) ரூ.560 அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று ரூ. 410 அதிகரித்து ரூ. 46,100க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்டம்பர் 28 அன்று ரூ. 150 உயர்ந்து ரூ. 46,250க்கு விற்பனையானது.
செப்டம்பர் 29 அன்று ரூ. 550 உயர்ந்து ரூ. 46,800க்கு விற்பனையானது.
செப்டம்பர் 30 அன்று ரூ. 170 உயர்ந்து ரூ. 46,970க்கு விற்பனையானது.
அக்டோபர் 1 அன்று ரூ. 70 குறைந்து ரூ. 46,900க்கு விற்பனையானது.
அக்டோபர் 2 : அன்று மாற்றமில்லாமல் ரூ. 46,900க்கு விற்பனையானது.
அக்டோபர் 3ஆம் தேதியான இன்று ரூ.150 உயர்ந்து ரூ. 47,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
நேற்று வெள்ளி ஒரு சவரன் ரூ. 496-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ, 4 அதிகரித்து 500 ரூபாய்க்கு விற்கபடுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 500 அதிகரித்து ரூ. 62,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
புதுவை மின் ஊழியர்கள் மீது பாயும் எஸ்மா சட்டம்!
கோவை தூய்மை பணியாளர்கள் போராட்டம் : 500 பேர் கைது!