சென்னையில் இன்று (மே 9) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 8) ஒரு கிராம் தங்கம் ரூ.6,630க்கும், சவரன் ரூ. 53,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.15 குறைந்து, ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.7,085க்கும், சவரன் ரூ.120 குறைந்துரூ.56,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 88.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.88,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாளை அட்சயதிரிதியை முன்னிட்டு இன்று தங்கம் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் தான்” : கான்களை வம்பிழுக்கும் கங்கனா