சென்னையில் இன்று (மே 4) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.52,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 3) ஒரு கிராம் தங்கம் ரூ.6,615க்கும், சவரன் ரூ. 52,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.15 குறைந்து, ரூ.6,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.52,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.7,070க்கும், சவரன் ரூ.120 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.86,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாத இறுதியில் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
காணாமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி.க்கு அனுப்பிய மரண வாக்குமூலம்! நெல்லையில் என்ன நடக்கிறது?