சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) ரூ. 64 உயர்ந்து ஒரு சவரன் 38,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (ஆகஸ்ட் 22) 22 கேரட் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 120 குறைந்து 38, 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்து 4,815 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 20 பைசா குறைந்து 61.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1.60 ரூபாய் குறைந்து 488.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மோனிஷா
தொடர்ந்து குறையும் தங்கம் விலை!