நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் இன்று (நவம்பர் 18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.4,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.40 குறைந்து ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5,347-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.42,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை நேற்றைய விலையில் எந்தவித மாற்றமுமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.67,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
பிரியா மரணம்: வழக்கின் பிரிவுகள் மாற்றம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!