புத்தாண்டு நெருங்கி வரும் நேரத்தில், தங்கம் விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 24) தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஆனால் கிறிஸ்துமஸ் தினமான இன்று (டிசம்பர் 25), சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ. 56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,745-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ. 61,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில்
வாஜ்பாய் 100-வது பிறந்தநாள்… திரவுபதி முர்மு, மோடி மரியாதை!
டங்ஸ்டன் சுரங்கம் மறுஆய்வு: அண்ணாமலை வரவேற்பு… எச்சரிக்கும் சு.வெங்கடேசன்