சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (டிசம்பர் 9) சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று (டிசம்பர் 10) மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.7,205க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.57,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.82 உயர்ந்து ரூ.7,860-க்கும், ஒரு சவரன் ரூ.656 உயர்ந்து ரூ.62,880க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியை பொறுத்தவரை இன்று (டிசம்பர் 10) திடீரென கிராம் ஒன்றுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 உயர்ந்து ரூ.1,04,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!