சென்னையில் இன்று (ஏப்ரல் 27) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.54 ,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 26) ஒரு கிராம் தங்கம் ரூ.6,755க்கும், சவரன் ரூ.54,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.15 உயர்ந்து, ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.7,240க்கும், சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.57,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 25 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.53,680 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனுபமாவின் புது பட அறிவிப்பு.. சம்பளம் இத்தனை கோடியா?
கோவை குண்டுவெடிப்பு : 14வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ!