தங்கம் விலை இன்று (செப்டம்பர் 28) ரூ.40 குறைந்துள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320அதிகரித்து ரூ.56,800-க்கு விற்பனையாகி நேற்று புதிய உச்சத்தை எட்டியது.
கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
தொடர்ந்து 51 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த தங்கம் விலை தற்போது 57 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.46,960க்கும், ஒரு கிராம் ரூ.5,870க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 7,550 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,01,000க்கும், கிராம் ரூ.101க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேர்தல் பத்திரம் : நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு!
சிறையில் ஒவ்வொரு நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்: செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு!