இனி தங்கம் மீது ஆசை படக்கூடாது என்கிற அளவுக்கு தங்கம் விலை இன்று அதிரடியாய் உயர்ந்து 43ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 40 ஆயிரம் ரூபாயைக் கடந்தது தங்கம் விலை. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கத்தின் விலை எப்போது 40 ஆயிரத்துக்குக் கீழ் வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதிரடியாய் விலை உயர்ந்து இன்று 43,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் கொண்ட தங்கம் ஒரு கிராமுக்கு 35 உயர்ந்து 5,380 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 280 உயர்ந்து 43,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் ஒரு சவரன் இன்று 46,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.75க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புது வருடத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரியா
முதன் முறையாக தேசிய கொடி ஏற்றிய திரௌபதி முர்மு
ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவில் தொடருமா?