சென்னையில் இன்று (ஏப்ரல் 24) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 22) ஒரு கிராம் தங்கம் ரூ.6,700க்கும், சவரன் ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.30 உயர்ந்து, ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.56,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.7,200க்கும், சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சித்திரை மாதத்தில் சுப முகூர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலுக்கும் தங்க விலைக்கும் யார் வேகமாக ஏறுவது என்பதில் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயியை மீட்போம் : சீமான் சொன்ன கரும்பு சேதி!
தேர்தல் பணி: விசாரணையைத் தொடங்கிய எடப்பாடி… எதிர்பார்க்கும் 3 தொகுதிகள்!