தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக இறங்குமுகமாக இருக்கிறது. மகளிர் தினமான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 40 ஆயிரம் ரூபாயைக் கடந்து தங்கம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தாலும் இன்னும் 40 ஆயிரத்துக்கும் கீழ் குறையவில்லை.
இந்நிலையில், இன்று (மார்ச் 8) 22 கேரட் கொண்ட தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 5,165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 41,320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5,635 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: செங்கோட்டையன் மகனுக்கு அண்ணாமலை வலை – எடப்பாடி கொடுத்த பதிலடி!