தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 15ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், 16ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது.
மூன்றாவது நாளாக சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600க்கு விற்பனையானது.
இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று (ஜனவரி 18) தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, இன்று ஒரு கிராம் ரூ.7,435 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.1,04,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முதல்வர் மீதான வழக்கில் ரூ.300 கோடி முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி!