சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.7,215-க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ. 57,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.49 குறைந்து ரூ.7,871க்கும், ஒரு சவரன் ரூ.392 குறைந்து ரூ. 62,968-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்த நிலையில் புத்தாண்டில் இன்று முதன்முறையாக விலை குறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!
கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!