தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

Published On:

| By indhu

Gold prices continue to rise - today's situation!

தங்கம் விலை இன்று (ஜூன் 12) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 11) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனையானது.

இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,680க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ.53,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.95க்கும், ஒரு கிலோ ரூ.95,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 11) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.800 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து, ரூ.95.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஸ்தான் மாற்றம்: விசித்திர பின்னணி!

வாரணாசியில் மோடியின் வெற்றி மோசடியானது : உபி பாஜக உறுப்பினர் வீடியோ வைரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel