சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 2) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.
ஆகஸ்டு மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
கடந்த வாரம் இறுதியில் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக குறைந்துள்ளது.
கிராமுக்கு 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,670க்கும், ஒரு சவரன் ரூ. 53,360-க்கும் விற்பனையாகி வருகின்றது.
வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ. 91-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 91,000க்கு விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஃபார்முலா கார் பந்தயம் வெற்றி : அமெரிக்காவில் இருந்து பாராட்டிய ஸ்டாலின்
வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!