சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகக் காணப்பட்டது. ஆனால், இன்று(செப்டம்பர் 13) யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.6,825-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.7,280-க்கும், ஒரு சவரன் ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.3.50 உயர்ந்து ரூ.95-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Asian Champions Trophy 2024: கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இந்தியா
ஜிஎஸ்டி குறித்து பேச்சு: நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்
ஹெல்த் டிப்ஸ்: டீ குடிப்பதற்கான சரியான நேரம் எது?