புதிய உச்சம் : ரூ.64 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

Published On:

| By Kavi

சென்னையில் தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. Gold price over Rs64 thousand

தங்கம் விலை கடந்த 2024 மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்த ஜனவரியில் 60 ஆயிரம் ரூபாயை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. அப்போது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற உச்சத்தில் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 11) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. Gold price over Rs64 thousandGold price over Rs64 thousand

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share