சென்னையில் தங்கம் விலை 6 நாட்களுக்குப்பின் இன்று முதல்முறையாகக் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஆண்டு இறுதியில் தங்கம் விலை சவரன் 42,000 ரூபாயை நெருங்கியதால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,317ஆகவும், சவரன், ரூ.42,536 ஆகவும் இருந்தது.
இந்தநிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு 12 ரூபாயும், சவரனுக்கு 96 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜனவரி 17) கிராமுக்கு 12 ரூபாய் சரிந்து ரூ.5,305ஆகவும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 440 ஆக குறைந்துள்ளது.
அதேவேளையில் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்துள்ளது. கிராம் 75.30 காசுகளாக விற்கப்படுகிறது.
கலை.ரா
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோகம்: முதல்வர் ஆறுதல்!
காணும் பொங்கல்: வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறப்பு!