தங்கம் விலை இன்று (ஜூலை 27) 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆகியவற்றுக்கான சுங்கக் கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தங்கம் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து கொண்டே வந்தது.
பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே தங்கம் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்றது.
கடந்த 24ஆம் தேதி தங்கம் விலை ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கு விற்றது.
நேற்று (ஜூலை 26) சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் தங்கம் விலை 3,920 ரூபாய் குறைந்தது.
இந்த சூழலில் இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ரூ.51,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.6,465க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“இது என்ன விமானமா? ரோலர் ஹோஸ்டரா?”: அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ!
திருவள்ளுவர் கூட கசந்துவிட்டாரா? : ஒன்றிய அரசை கண்டித்து ஸ்டாலின் வீடியோ!
முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்… தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் பதில்!