தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 16) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,892க்கும், சவரன் ரூ.39,136க்கும் விற்கப்பட்டது. நவம்பர் 13ஆம் தேதி ஞாயிறு அன்று மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி கிராமுக்கு 9 ரூபாயும் சவரனுக்கு 72 ரூபாயும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,208க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று நவம்பர் 15ஆம் தேதி கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் அதிகரித்து ரூ.39,520 விற்பனை செய்யப்பட்டது.
22 கேரட்
இந்நிலையில் இன்று (நவம்பர் 16) 22 கேரட் கொண்ட தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.4,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 கிராம் கொண்ட ஒரு சவரன் இன்றைய நிலவரப்படி ரூ.160 உயர்ந்து 39,680 விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 176 உயர்ந்து ரூ.43,288க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
அறநிலையத் துறை பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி!