ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 424 உயர்ந்து இருக்கிறது.

தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஆனால் தங்கம் விலை சவரன் 40 ஆயிரம் ரூபாயை தாண்டவில்லை.

நேற்று ஒரு கிராம் ரூ. 4,717 ஆகவும், சவரன் ரூ. 37,736 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று(நவம்பர் 5) தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு 424 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

கிராம் ஒன்றுக்கு 53 ரூபாயும் சவரனுக்கு ரூ. 424 ரூபாயும் உயர்ந்து சவரன் 38,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,770 ரூபாயாகும்.

இதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்து இருக்கிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1.90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 66.30 ஆகவும், ஒரு கிலோ ரூ. 66, 300 ஆகவும் விற்கப்படுகிறது.

கலை.ரா

மகள் இயக்கத்தில் ரஜினி: புதிய அப்டேட்!

செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு அதிகரிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.