தமிழகத்தில் இன்று (டிசம்பர் 5) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 232 அதிகரித்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கம் விலை 40 ஆயிரத்தைத் தாண்டிய போதிலும், நாளுக்கு நாள் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
நேற்று (டிசம்பர் 4) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 232 விலை உயர்ந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 29 விலை உயர்ந்து ரூ. 5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 256 விலை உயர்ந்து ரூ. 44,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 32 விலை உயர்ந்து ரூ. 5,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்வைச் சந்தித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 7.20 விலை உயர்ந்து ரூ. 580-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 900 விலை உயர்ந்து ரூ. 72,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
ஜி தந்த ஜி20 அங்கீகாரம்: குஷியுடன் டெல்லி புறப்படும் எடப்பாடி
ஜெ நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!