தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றைய விலை உயர்வால் ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.
ஆவணி மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வரிசை கட்டியுள்ளன. இதனை முன்னிட்டு திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் ஜவுளி, நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் தங்கம் விலை ஏறுமுகமாக இருப்பது பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சவரன் ரூ. 39,040!

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 38,800 ரூபாயிலிருந்து 39,040 ரூபாயாகவும், ஒரு சவரன் 4,850 ரூபாயிலிருந்து 4,880 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
10 கிராம் தங்கம் 42,320 ரூபாயிலிருந்து 42,592 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பிரியா
மின்சாரத் திருத்த சட்ட மசோதாவை எதிர்ப்பது ஏன்? – அமைச்சர் செந்தில்பாலாஜி