தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.440 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.40 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி ரூ.4,916க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் விலை நேற்று (டிசம்பர் 1) ரூ. 4,955க்கும், இன்று ரூ.5,010க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், 22 கேரட் கொண்ட ஒரு பவுன் தங்கம் ரூ. 40,080ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த செய்தி பேரிடியாய் வந்து விழுந்துள்ளது.
இந்த மாதம் 04, 11, 12, 14 ஆகிய தேதிகள் முகூர்த்த நாள் உள்ளிட்ட விஷேச தினங்கள் ஆகும். இதனால் தங்கம் வாங்கக் காத்திருந்தோர், பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.
இந்த விலை உயர்வுக்கு, இடைவிடாது தொடரும் ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே முக்கிய காரணம் என தங்கம், வைர நகைக் கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு இன்று ரூ.70 காசு அதிகரித்து ரூ.70.50 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.70,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
ராகுல் நடைபயணம்: இணையும் பிரபலங்கள்!
ஜம்மு காஷ்மீர்: பண்டிட்களுக்கு நியமன உறுப்பினர் அஸ்தஸ்து!