தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ. 41 ஆயிரத்தை கடந்து வருவதால் நடுத்தர வர்க்க மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதும், பங்குப்பத்திரங்களுக்கு பதிலாக தங்கத்தின் மீதான முதலீடு திரும்பியதாலும் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 2022 ஜனவரி 1 ஆம் தேதி ஆபரணத் தங்கம் சவரன் 36 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு 40 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்டது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று(ஜனவரி 1) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 5,130 ரூபாய்க்கும், சவரன் 41,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று(ஜனவரி 2) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,150ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையாகிறது.
தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகளும், கிலோ 200 ரூபாயும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராம் ரூ. 74.50 காசுகளாகவும், கிலோ ரூ. 74,500 ஆகவும் உள்ளது.
கலை.ரா
அதிகாலையில் சோகம்: பத்திரிக்கையாளர் மரணம்!
கமலுடன் பேசியது என்ன? உரையாடலை வெளியிடும் ராகுல்